ராம்சேது தேசிய நினைவு சின்னம் இல்லை
ராமயண காவியத்தில், சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்ற போது, அவரை மீட்க கடலைக் கடக்க வானரர்களைக் கொண்டு ராமன் பாலம் கட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் எச்சம் இன்னும் இலங்கை கடற்கரையில் உள்ளது. எனவே, ராம் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ராம் சேது பாலம் தேசிய நினைவு சின்னத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
மேலும், நிரந்தர வடிவமைப்பைக் கொண்டவகளை மட்டுமே பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க முடியும். ராம் சேது பாலம் கடலில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகியுள்ள மணல் திட்டுக்கள் மட்டுமே. அவை 100 ஆண்டு பாரம்பரியம் மிக்கது இல்லை என்றும் கூறியுள்ளது.
திராவிட ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்சர். ராமசாமி, 130 ஆண்டுகள் பழமையான ஜெர்மன் ஆய்வை மேற்கோள் காட்டி, ராம் சேது பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ஆய்வில், ராமாயணமே ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.