மோடிக்கு டொமினிக் பிரதமர் ரூஸ்வெல்ட் புகழாரம்

கொரனாவின் கோர தாண்டவத்தில் இருந்து உலகின் எந்த நாடும் தப்பிக்கவில்லை. 72 ஆயிரம் பேர் மட்டும் வசிக்கும் சிறிய இலத்தீன் அமெரிக்க நாடான டொமினிக்கும் கொரனாவினால் பாதிக்கப்பட்டது.

கொரனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. டொமினிக் பிரதமர் ரூஸ்வெல்ட் தங்கள் நாட்டுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.இதனையடுத்து அந்த நாட்டுக்கு கொரனா தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர், “மற்ற நாடுகளை விட எங்கள் நாட்டு மக்கள் தொகை மிகக் குறைவு தான். கொரனா பரவலைத் தடுக்க தடுப்பூசி இன்றியமையாதது. எங்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசியை வழங்குவார்கள் என்று கற்பனை செய்து பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் பிரதமர் ரூஸ்வெல்ட்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…