பிப்ரவரி 18ல் சென்னை சர்வதேச திரைப்பட விழா

2019 டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கொரனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி, சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் சென்னையிலுள்ள, பிவிஆர் மல்டிப்ளக்ஸ் மற்றும் காசினோ திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த விழாவில், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, ’ஆப்பிள்ஸ்’, ’தி ஸீப் வாக்கர்ஸ்’, ’ரன்னிங் டூ தி ஸ்கை, உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
நிகழ்ச்சியின் தொடக்க திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின், ‘தி கேர்ஸ் வித் எ பிரேஸ்லெட்’ படமும், நிறைவாக ஜெர்மனி நாட்டின், ‘ ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி’ என்ற படமும் திரையிடப்படுகின்றன.
மேலும், தமிழ் படங்களுக்கான போட்டியில், ‘சூரரைப்போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘காளிதாஸ்’, ‘க\பெ ரண சிங்கம்’ ,’கன்னிமாடம்’ உள்ளிட்ட 13 படங்கள் திரையிடப்படுகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 17 தமிழ் படங்கள் திரையிடப்படுகிறது.