கவர்னரை திரும்பப் பெற வேண்டும் – ஐனாதிபதியிடம் புதுச்சேரி முதல்வர் புகார் மனு

புதுச்சேரி கவர்னராக இருக்கும் கிரண்பேடி, அன்றாட அரசு பணிகளில் தலையிடுவதாகவும், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருப்பதாகவும், முதல்வர் நாராயண சாமி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்.

எனவே, மத்திய அரசு அவரை திருப்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 16 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தபட இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், கவர்னர் கிரண்பேடி குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக புகார் அளிக்க, முதல்வர் நாராணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ண்ராவ், கந்தசாமி ஆகியோர் டெல்லி சென்றனர்.
ஜனாதிபதியை சந்தித்து, கவர்னர் பற்றிய புகார் மனுவை அளித்தனர். மேலும், சட்ட விதிகளை மீறி, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வரும் கவர்னர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.