என்னைப் போல் யாரும் இல்லை – ஆணவத்தில் கங்கனா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதை தமிழ், ஹிந்தி என்ற இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
தன் நடிப்புத் திறமை குறித்து கங்கனா ரனாவத் ஆணவம் கொண்டு கருத்து தெரிவித்துள்ளார். தன் டிவிட்டர் பதிவில் ”ஒரு நடிகையாக நான் வெளிப்படுத்தும் திறமைகள் உலகில் யாரிடமும் இல்லை. வித்தியாசமான நடிப்பில் ஷெரில் ஸ்டிரீப் போலவுல், ஆக்ஷன் மற்றும் கவர்ச்சியில் கால் கேடட் போலவும் இருக்கிறேன். என்னை விட சிறப்பான நடிகையை காண்பித்தால் என் ஆணவத்தை விட்டி விடுகிறேன் ” என்று கூறியுள்ளார் கங்கனா.