அரசியல் ஆதாயத்துக்காக ரதயாத்திரையை பயன்படுத்துகிறது பாஜக – மம்தா பானர்ஜி
மேற்கு வங்க சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக ரத யாத்திரையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
”பாஜக ரத யாத்திரையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகிறது. பொதுவாக ரத யாத்திரை மதம் சார்ந்தது. ரதத்தில் கடவுள்கள் மட்டும் தான் ஊர்வலம் வருவரார்கள். ஆனால் பாஜக நடத்தும் ரத யாத்திரையில் அக்கட்சியின் தலைவர்கள் தான் வருகிறார்கள். இதன் மூலம் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிறார்கள்”. இவ்வாறு, நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யும்?