48 மணிநேர வேலையில் மாற்றம் இல்லை; 3 நாட்கள் விடுமுறை

மத்திய அரசின் வேலை மற்றும் தொழிலாளர் துறை சார்பில், தொழிலாளர் விதிகளில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக அலுவக வேலை நேரங்களில் மாற்றங்கள் கொண்டு வர பரிசீலிக்கப்படுகிறது. ஆனால், 48 மணிநேர வேலை நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கான விதிமுறைகள் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றதும், பொதுமக்களின் கருத்துகள் இணைய தளங்கள் வாயிலாக கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிறுவனம் தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, ஒரு நாளுக்கு 12 மணிநேரம் என்ற கணக்கில் 48 மணிநேர வேலையை பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது. இதன்படி, 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும். இவ்வாறு, வேலை வாய்ப்பு அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது, ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்ற விதி நடைமுறையில் உள்ளது.

மேலும், இந்த விதிமுறை மாற்றங்களினால் தொழிலாளர்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை , தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு சேவை மூலம் அமல்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…