ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கார் இல்லை; குறும்பட இறுதிபட்டியலில் பிட்டூ படம்

இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கார் பரிந்துரையான ஜல்லிக்கட்டு படம், இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த ஜல்லிக்கட்டு என்ற மலையாளப் படம், 2019-ல் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிறந்த சர்வதேச – அயல்நாட்டு பிரிவில் ஆஸ்கார் விருதுக்காக, இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு படம் பரிந்துரை செய்யப்பட்டது. அயல்நாட்டு விமர்சகர்களும் படத்தை வெகுவாக புகழ்ந்திருந்ததால், இம்முறை இறுதிப்பட்டியலில் இந்திய படம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதன்கிழமை வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் ஜல்லிக்கட்டு படம் இடம்பெறவில்லை.

இந்நிலையில் குறும்பட பிரிவிற்கான இறுதிப்பட்டியலில், இந்தியாவின் ’பிட்டூ’ படம் இடம்பெற்றுள்ளது. இதுவரை, ஒரு இந்திய படம் கூட ஆஸ்கார் விருதை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…