கானா தான் சென்னையின் நாட்டுப்புற இசை – சந்தோஷ் நாராயணன்
ஏ1 படத்துக்குப் பிறகு சந்தானம் – இயக்குநர் ஜான்சன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ’பாரிஸ் ஜெயராஜ்’. அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரன்,மாருதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் கதைகளம் இருப்பதால் படம் முழுக்க கானா பாடல்கள் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது. மேலும், சென்னையின் நாட்டுப்புற இசை கானா தான். 300 ஆண்டுகளாக அதை கொண்டாடி வருகிறோம். நம் பாரம்பரிய இசையை திரையில் கொண்டு வர முயன்றால் அதை விட பெரிய விஷயம் எதுவும் இல்லை. இவ்வாறு, சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.