இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகை
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அவர்கள் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை ஏப்ரல் 2 வது வாரம் அல்லது இறுதியில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.