முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் அபாரமாக விளையாடி, தொடரை வென்ற இந்திய அணி, உள்நாட்டில் சொதப்பியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 4 ஆவது தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.