அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஐனவரியில் பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடி, நேற்று முன்தினம் தொலைபேசியில் அவருடன் உரையாடினார். அப்போது, பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம், சுதந்திரமான கடல் போக்குவரத்து, உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அதிபராக ஜோ பைடன் பதிவியேற்ற பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.