குலாம் நபி ஆசாத்துக்கு பிரியாவிடை – கண்கலங்கிய மோடி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிகாலம் வரும் 15 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனையெட்டி, மாநிலங்களவையில் அவருக்கு பிரியா விடை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தார்.
தொடர்ந்து, “நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் முதல்வராக பதவி வகித்தோம். தீவிரவாத தாக்குதலால் காஷ்மீரில் சிக்கிய குஜராத் மக்கள் சொந்த ஊர் திரும்பிய போது, மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும், காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத்தும் மேற்கொண்ட முயற்சியை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. உங்களை நான் ஒய்வு பெற விட மாட்டேன். தொடர்ந்து ஆலோசனைகளை கேட்டுக் கொண்டே இருப்பேன்.உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.எதிர்கட்சித் தலைவர் என்ற இடத்தை இனி வேறு ஒருவர் நிரப்புபவது கடினம். அவையை சுமூகமாக நடத்தவும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ஆசாத்” என்று புகழாரம் சூட்டினார் பிரதமர்.