உள் ஒதுக்கீட்டால் உயிர்பெற்றது அதிமுக – பாமக கூட்டணி
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியனரும், எதிர்கட்சியினரும் கூட்டணி பேச்சு வார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளது பாமக. அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தது பாமக.
ஆனால், பாமக ““மாற்றம், முன்னேற்றம், அன்புமணி” என்ற முழக்கத்தோடு 2016 சட்டமன்ற தேர்தலை தனியாக சந்தித்தது. தனக்கு வாங்கு வங்கி அதிகம் உள்ள வடமாநிலங்களில் வெற்றி பெறுவோம் என நினைத்தது பாமக. ஆனால், தான் போட்டியிட்ட 232 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து 2019 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.இந்தமுறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது.ஆனால், ஒப்பந்தப்படி அன்புமணி மாநிலங்கவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பாமக வன்னியர்களுக்காக 20% இடஒதுக்கீடு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆளும் அதிமுக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்காவிட்டால் கூட்டணி இல்லை என்று தெரிவித்திருந்தார் ராமதாஸ்.
இப்போது உள் ஒதுக்
கீடு வழங்கினால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது பாமக. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக, அதிமு/க அமைச்சர்களுடன் பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த தேர்தலிலும் அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது.