தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு நடவடிக்கை
திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு தாமிரபரணி ஆற்றில் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கை ஆய்வு- எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
முக்கூடல் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 5400 கன அடி கொள்ளளவு மழை நீர் இன்று தொடங்கி தற்போது வரை வந்து கொண்டிருப்பதாலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் கிராமங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரண ஆற்றில் குளித்தோம் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருந்திட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கின்றது மேலும் தாமிரபரணையாற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டும் வருகின்றது .
ஆத்தூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கபால்சிங் நிர்வாக அதிகாரி முருகன் தலைமையில் கவுன்சிலர்களும் அங்குள்ள ஊழியர்களும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
மேலும் ஆற்றங்கரைக்குள் பொதுமக்கள் யாரும் இறங்காதவாறு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டும், தடுப்புகள் அமைக்கப்பட்டும் ஆற்றங்கரைக்குள் செல்லக்கூடாது என்றும் ஆத்தூர் பகுதியை சுற்றி எச்சரிக்கை பதாகைகள் வைத்து அதன் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளனர்.