10 வீடுகளுக்கு ஒரு பதுங்குகுழி; இஸ்ரேல் போரில் இந்தியர்களின் கண்ணீர் கதை
இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு இந்தியர்களை மீட்டு வருகிறது. அதில் தமிழகத்தை சேர்ந்த 530 பேர் இதுவரை தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 23 பேர் வந்துள்ளனர். குறிப்பாக மதுரை மற்றும் திருச்சி சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் கடந்த16. ம் தேதி வந்துள்ளனர் இன்று திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த தீபக் மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் டெல்லியில் இருந்துஇன்டிகோ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.
அவர்களை வருவாய் துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு கார்களில அனுப்பி வைத்தனர். மதுரை விமான நிலையத்தில் தீபக். செல்வகுமார் அளித்த பேட்டியில் தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் போரில் நாங்கள் தலைநகர் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் வசிக்கிறோம்.
போர் அபாயம் இருப்பது தான் உள்ளது ஆனாலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் .10 வீடுகளுக்கு அல்லது 20 வீடுகளுக்கு ஒரு பதுங்குகுழி உள்ளது அதில் சைரன் ஒளித்ததும் போய் பதுங்கிக் கொள்ளலாம் அந்த வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.
சொந்த நாட்டில் இருந்து குடும்பத்தினர் போன் செய்து வருவதால் நாங்கள் தாயகம் திரும்பி உள்ளோம். மத்திய அரசு மாநில அரசு எங்களை அடிக்கடி தொடர்பு கொண்டு எல்லா உதவிகளையும் செய்து வந்தனர்.
டெல்லியில் இருந்து மதுரை வரும் முறை கூட எங்களுக்கு தொலைபேசியில் தமிழக அதிகாரிகள் கேட்டு உதவிகளை செய்தனர் அவர்களுக்கு நன்றி என கூறினார்