கிறிஸ்துமஸ் ஆர்டர் கிடைக்காததால் 2 ஆயிரம் கோடி ஜவுளி ஏற்றுமதியில் இழப்பு

கரூர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் ஆர்டர் கிடைக்காததால்,  1800 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டபோதும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை பாதிப்பில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறது ஜவுளி ஏற்றுமதி தொழில். சுமார்,  2000 கோடி அளவில் நடந்து வந்த கிறிஸ்துமஸ் ஆடர் தற்போது , வெறும் 200 கோடியாக குறைந்து விட்டது என வேதனையை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது, நூல் விலையேற்றத்தால் பல நூற்பு ஆலைகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சுக்கு நிரந்தர விலை நிர்ணையம் இல்லாமல் இருந்து வருவதால், நூல் விலை கட்டுக்குள் இல்லை என கூறப்டுகிறது. ஒரு பக்கம் பொருளாதார சீரழிவால் பாதிக்கப்பட்டும், மறுபுறம் நூல் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டும் ஜவுளி ஏற்றுமதி தொழில் தடுமாறி வருகிறது.

இதனால், ஏற்கனவே எடுத்த ஆடர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட படி அந்த விலைக்குள் முடிக்க முடியாமலும், உரிய நேரத்தில் ஆடர்களை அனுப்ப முடியாத  நிலைக்கு  தள்ளப்பட்டுள்னர். இந்த நிலை நீடித்தால் ஜவுளி ஏற்றுமதி தொழில் நலிவடைந்து இதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை உருவாகும் என அச்சமடைந்துள்ளனர்

கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 400 க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகிறது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு, சுமார் 8000 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வந்தது.  இதன்மூலம், சுமார் 1.50 லட்சம் பேர்கள் நேரடியாக மற்றும் 1 லட்சம் பேர்கள் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, கிறிஸ்துமஸ் ஆர்டர் கிடைக்கவில்லை. ஆண்டு தோறும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்திக்கு கைகொடுத்து வந்த  கிறிஸ்துமஸ் ஆடர் இந்த ஆண்டு கைவிட்டது. எப்பவும், நவம்பர் முதல் வரத்திலேயே ஆடர் தொடங்கிவிடும். தவிர, ஜெர்மன் நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடக்கும், ஜவுளி வர்த்தகக் கண்காட்சியில் கரூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று ஆர்டர்களை பெறுவது வழக்கம். கிறிஸ்துமஸ் ஆர்டர்களை ஜூன், ஜூலை மாதங்களுக்குள் முடித்து அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஆண்டு  வர்த்தக  கண்காட்சியில் பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைக்கவில்லை. சுமார் 2000 கோடி வரை செய்து வந்த கிறிஸ்துமஸ் ஆடர் இந்த ஆண்டு வெறும் 200 கோடியாக குறைந்து விட்டது. இதனால், பெரிய அளவில் கரூர் ஜவுளி ஏற்றுமதி எந்த ஆண்டும் இல்லாத வகையில் சரிவை சந்தித்து உள்ளது.: ஒருசில பெரிய நிறுவனங்களும் மட்டுமே ஆர்டர்  வந்துள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

நலிவடைந்துவரும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை காப்பாற்ற மத்திய அரசு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வரியில்லா வர்த்தகக் கொள்கையில் இணைய வேண்டும். அப்போது தான் பாகிஸ்தான் மற்றும் ஐரோப்ப நாடுகளுடன் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் போட்டி போட்டு வெற்றி பெற முடியும். மேலும், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் அந்நிய செலவாணி அதிகரிக்க இந்த வரியில்லா ஒப்பந்தம் கைகொடுக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *