மே 28-ல் ஜிப்மேட் நுழைவு தேர்வு

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு மே 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு மாணவர்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் http://jipmat.nta.ac.in/ என்ற வலைத்தளம் வழியாக ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மே 2 முதல் 4-ம் தேதி வரை வாய்ப்பு தரப்படும். இதற்கு தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.2000-ம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (இடபிள்யுஎஸ்), எஸ்சி/எஸ்டி, 3-ம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.1000-ம் செலுத்த வேண்டும்.

இந்த தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் நடைபெறும். மேலும், சென்னை, கொச்சி, பெங்களூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உட்பட 76 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *