கொடைக்கானல் ஸ்டார் லேக்கில் படகு சவாரி நிறுத்தம், சுற்றுலா பயணிகள் அவதி!

கொடைக்கானல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் படகு இல்லம் அமைக்கும் பணி தாமதத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது . இங்கு பல்வேறு பகுதிகளை சென்று சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் மத்திய பகுதியாக நட்சத்திர ஏரி இருந்து வருகிறது . இந்த நட்சத்திர ஏரியில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு சவாரி விடப்பட்டிருந்தது . 

நகராட்சி சார்பில் இயங்கி வந்த படகு குழாம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனை சீரமைத்து தரவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர் . பணிகள் துவங்கி பல மாதங்கள் ஆகியும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணி தற்போது முடிவு பெறாமல் இருந்து வருகிறது . 

இதனால் அப்பகுதியே வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்தையே அடைந்து வருகின்றனர். நட்சத்திர ஏரியில் தயார் செய்யப்பட்டு வரும் படகு குழாம் காட்சி பொருளாகவே இருந்து வருவதாக பொதுமக்களும் குற்றம் சாட்டியிருக்கின்றனர் . எனவே நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட வரும் படகு குழாம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *