புது டெக்னிக்கா இருக்கே…! ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவிடாமல் வியாபாரிகள் செய்த செயல்…!

சிறுவர்களை கடைகளில் அமர வைத்த ஆக்ரமிப்பாளர்கள், போலீசார் தயக்கம் கோயில்வளாகத்தை ஆக்ரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்ற முயன்ற போது எதிர்ப்பு தெரிவித்து கடைகளில் சிறுவர்களை அமர வைத்ததால் போலீசார் பின்வாங்கினர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளிகோயில்களில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள  அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று.  தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேச தினங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.ஆக்ரோஷமான அம்மனை சாந்தப்படுத்த பக்தர்கள் எலுமிச்சை மாலை அணிவித்து வணங்குவார்கள் பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மடப்புரம் கோயில் வழியாக ஏனாதி, தேளி, கணக்கன்குடி, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. 

கோயில் வாசலை ஆக்ரமித்து பலரும் தேங்காய், பழம், சூடம், எலுமிச்சம்பழம், கூல்டிரிங்ஸ் கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. நீர்வழித்தடத்தை ஆக்ரமித்தும் கடைகள் இருப்பதை கோர்ட் அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கடந்த ஒரு வருடமாக கோயில் நிர்வாகம் ஆக்ரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்து வருகிறது. கோயிலின் ஒருபகுதியில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் மறுபுறம் ஆக்ரமிப்பு அகற்ற முயன்ற போது ஆக்ரமிப்பாளர்கள் சிறுவர், சிறுமியர்களை கடைகளில் அமர வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆக்ரமிப்பு அகற்ற வந்த போலீசார் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் பின்வாங்கினர். பலமுறை சமாதானம் செய்தும் ஆக்ரமிப்பாளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினரும் சாதகமாக இறங்கியதால் ஆக்ரமிப்பு அகற்றம் தற்காலிமாக ஒத்திவைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்ரமிப்புகளை அகற்றப்பட்டு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள், வாகன நிறுத்துமிடம், விடுதி வசதி செய்யப்பட உள்ளது. ஆக்ரமிப்பாளர்களுக்குகடைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்தும் ஆக்ரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *