ரமலான் நோன்பு இன்று துவக்கம்… பள்ளிவாசல்கலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் ரமலான் நோன்பு துவக்கம்: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு. இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது இந்த ஆண்டு இன்று துவங்கி வரும் 30நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். 

இஸ்லாமியர்கள் நோன்பு அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பின்பு உணவு அருந்திவிட்டு, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடித்தனர். மேலும் இரவு நேரங்களில் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை ஈடுபடுவார்கள்.‌

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் இரவு முழுவதும்  ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழீம் தலைமையில்  தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டனர்.  இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்ந்து அதிகாலையில் இஸ்லாமியர்கள் உணவு உட்கொண்டு நோன்பை தொடங்கினர். 

இந்த நிலையில்  தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து  தொழிலாளர்கள் தூத்துக்குடி யில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

 இவர்களுக்கு அதிகாலையில் உணவு கிடைப்பது மிகவும் சிரமத்துக்கு உள்ளானது இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் பாதுஷா சஹர் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தூத்துக்குடி பாதுஷா சஹர் கமிட்டி சார்பில் இஸ்லாமியர்களுக்கு சஹர் உணவு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.‌ இதில் அதிகாலையில் தினமும் 400க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சஹர் உணவு அருந்தி நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

 தூத்துக்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வேலை காரணமாக இங்கு தங்கி இருப்பவர்களுக்கு சஹர் உணவு எந்த சிரமமும் இல்லாமல் கிடைப்பதற்காக ஆண்டுதோறும் வெகு சிறப்பாக வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *