இந்திய மாற்று திறனாளி கிரிக்கெட்டில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு அமைச்சர் நிதி உதவி…!

மாற்று திறனாளி கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக விளையாட உள்ள விளையாட்டு வீரருக்கு அமைச்சர் சார்பில் நிதிஉதவி இராமநாதபுர மாவட்டம் கடலாடி தாலுகா கீழசெல்வனூர் கிராமத்தை சேர்ந்த வினோத்பாபு (29) மாற்று திறனாளி.

இவர் சிறுவயது முதல் மாற்று திறனாளிகள் சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் கொண்டு இருந்து தமிழக அளவில் விளையாடி பல பரிசுகளை பெற்று தற்போது இந்திய அணியின் கேப்டன் ஆக உள்ளார். இந்நிலையில் வரும் மார்ச் 26 ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில்  இந்தியா, , இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்  அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் இந்தியா சார்பில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்ள உள்ளது. வறுமையில் வாடும் வினோத்பாபு லண்டன் செல்ல வசதி இல்லாததால் முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் அவர்களிடம் உதவி கேட்டார். உடனடியாக முதுகுளத்தூர் சட்ட மன்ற அலுவலகம் மூலம் வினோத் பாபுவின் ஊருக்கு சென்று நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று வினோத்பாபுவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் நிதியுதவியை திமுக கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் வழங்கியும்,  விளையாட்டில் வெற்றி பெற அனைவரும் வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *