சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா… மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் 

சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா மாறும் சூழ்நிலையில் இருப்பதாக சிறுநீரக விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர் பேச்சு. தூத்துக்குடியில் உலக சிறுநீரகத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி இணைந்து சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி வி வி டி சிக்னல் பகுதியிலிருந்து துவங்கிய இந்த பேரணி மில்லர்புரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் சிறுநீரகத்தை எவ்வாறு பாதுகாப்பது எந்த வகையான உணவுகளை சிறுநீரகத்தை பாதுகாக்க தவிர்ப்பது சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான பழக்கவழக்கங்கள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வு பதாககளை ஏந்தியபடி சென்றனர்.

மேலும் பேரணி முடிவில் சிறுநீரகத்தை பாதுகாப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனையும் வழங்கப்பட்டது. அப்போது பேசிய மருத்துவர் வைரமுத்து சர்க்கரை நோயால் தான் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா மாறி வருவதாக கூறினார். 

எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் சிறுநீரகத்தை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்து வந்தால் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *