சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறீங்களா?அப்படின்னு யாரும் இனிமேல் கேட்கக்கூடாது..உலக சுகாதார நிறுவனம்.

வெங்கட்ராம்.

உணவே மருந்து என்று நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த காலம் சென்று இப்போது பிறக்கும் குழந்தையிலிருந்து அனைவருக்கும் உடல் பிரச்சினைகள் ஏற்பட தொடங்கிவிட்டது. அதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் எதுவென்றால் நமது உணவு பழக்கத்தின் மாற்றமாகும். வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நம் வாழ்க்கை சூழலில், துரித உணவுகள் மிகப்பெரிய பங்காற்ற தொடங்கிவிட்டன. நாம் தற்போது உண்ணும் உணவுகள் அனைத்திலும் உப்பு அளவு அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டோம். இதனை தான் குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உப்பை குறைக்கும் கொள்கையை நாம் உறுதியாக கடைப்பிடித்தால் 2030 ஆம் ஆண்டிற்குள் 70 லட்சம் மக்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்று தெரியவந்துள்ளது. உப்பு அதிகமாக எடுத்துக் கொள்வதால் நரம்பு பிரச்சனைகள் இதய நோய் கிட்னி பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல் பிரச்சினைகள் நம்மை தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே அதிக உப்பு ரொம்ப தப்பு என்னும் கொள்கையை கடைபிடிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *