இந்தியாவின் ஒற்றுமைக்கு உதாரணம் என பொதுமக்கள் மகிழ்ச்சி! இந்துக்கோவிலில் நடந்த இசுலாமிய திருமணம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

இமாச்சல பிரதேசம், சிம்லா மாவட்டம், ராம்பூரில் சத்தியநாராயணன் கோயில் உள்ளது. விஸ்வ இந்து பரிஷத் கோயிலை நிர்வகித்து வருகிறது. அதோடு கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகமும் செயல்படுகிறது.

சத்தியநாராயணன் கோயிலில் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி கடந்த 3-ம் தேதி கோயிலில் ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் ஜோடிக்கு முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து கோயில் செயலாளர் வினய் சர்மா கூறியதாவது:
சத்தியநாராயணன் கோயில் நிர்வாகத்தை விஎச்பி கவனித்து வருகிறது. கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது. விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப் புகள் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

அதை பொய்யாக்கும் வகையில் இந்து கோயில் வளாகத்தில் முஸ்லிம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்துக்களும் கலந்து கொண்டனர். திருமண விருந்து, விழா ஏற்பாடுகள் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்றன. திருமணம் மட்டும் முஸ்லிம் பாரம்பரியத்தின்படி நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மணப்பெண்ணின் தந்தை மகேந்திர மாலிக் கூறும்போது, “கோயில் நிர்வாகிகள், ராம்பூர் நகர மக்கள் எனது மகளின் திரும ணத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். எனது மகள் எம்.டெக். சிவில் இன்ஜினீயர். மருமகன் ராகுல் ஷேக்கும் சிவில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இருவரின்விருப்பத்தின்படி சத்தியநாராயணன் கோயிலில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *