நிர்வாணமாக பெண்கள் இருக்கும் அதிசய கிராமம்! இந்தியாவில் இன்னும் இருக்கிறதா?-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் திருவிழாவையொட்டி பெண்கள் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நிர்வாணமாகவே வீட்டில் முடங்கி இருக்கிறார்கள் என்றாம் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நீங்கள் படித்தது உண்மைதான். இப்படி ஒரு நடைமுறை இன்றும் கூட இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பல்வேறு மொழி, கலாசாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாநில மக்களின் வாழ்க்கை முறையும், பின்பற்றும் மரபுகளும் வேறுபட்டு உள்ளன. அதன்படி பார்த்தால் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் மக்களிடம் ஏராளமான மாறுபட்ட பழக்கவழக்கங்களை நாம் பட்டியலிடலாம்.

இதில் சில பழக்க வழக்கங்கள் என்பது முற்றிலும் வித்தியாசமானதாகவும், பழமையானவையாகவும் உள்ளன. குறிப்பாக நகரங்களை காட்டிலும் கிராமங்களில் தான் பழமையான மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆப்பிள் தேசமான இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வினோதமான பழக்கவழக்கம் பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் மணிகர்ணா பள்ளத்தாக்கில் பினி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் லாஹூ கோண்ட் எனும் தெய்வத்தை வழிப்பட்டு வருகின்றனர். இந்த தெய்வத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 5 நாள் திருவிழா நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் சவான் மாதத்தில் 5 நாட்கள் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த 5 நாள் திருவிழாவில் தான் பெண்கள் ஆடைகள் எதுவும் அணிவது இல்லையாம்.

முன்னொரு காலத்தில் அரக்கன் ஒருவன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த அரக்கன் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் பெண்களை துன்புறுத்துவதையும், தொல்லை கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தானாம். இந்த அரக்கனை லாஹு கோண்ட் தெய்வம் அழித்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் லாஹு கோண்ட் திருவிழாவில் பெண்கள் ஆடைகள் அணியாமல் இருப்பதை காலம்காலமாக பின்பற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சாவான் மாதத்தில் 5 நாட்கள் திருவிழா நடக்கும் நிலையில் அப்போது கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணிவதில்லை. தற்போது காலம் மாறியுள்ளதாக இந்த நடைமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி இளம்பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பளியை மட்டும் உடலில் போர்த்தி கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் வயது முதிர்ந்தவர்கள் நிர்வாணமாகவே இருக்கின்றனர்.

மேலும் இவர்கள் திருவிழாவின் 5 நாட்களும் தற்போது வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இந்த 5 நாட்களும் இந்த நடைமுறையை பெண்கள் பின்பற்றாவிட்டால் அவர்கள் துன்பங்களை அனுபவிப்பார்கள் என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். இதனால் தொன்றுதொட்டு பெண்கள் ஆடைகள் அணியாமல் இருக்கின்றனர்.

மேலும் இந்த திருவிழாவில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும் ஆண்களுக்கான கட்டுப்பாடு என்பது நம்மூர்களில் இருப்பது போன்றே இருக்கிறது. அதாவது திருவிழா நாட்களில் மதுபானம் அருந்தவும், அசைவம் சாப்பிடவும் கூடாது என்பது தான் ஆண்களுக்கான கட்டுப்பாடாக உள்ளது. மேலும் இந்த 5 நாட்களும் கணவன்-மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது என்பதும் எழுதப்படாத விதியாக அங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *