சர்வதேச வேலையின்மை தினம்…..இந்தியாவின் நிலவரம் எப்படி……..

வெங்கட்ராம்.
அமேசான் – 18000. மைக்ரோசாப்ட் – 13000. ஆல்பாபெட்( google) – 12000. மெட்டா – 11000. Byjus – 4000. Twitter – 3700. Ford 3580. இவையெல்லாம் அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செய்த வருடாந்திர லாபம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்றால், அதுதான் தவறு. இவை அனைத்தும் அந்த அந்த நிறுவனங்கள் சமீபத்தில் செய்த பணி நீக்கம் ஆகும். வேலைக்கு ஆட்கள் தேவைப்படும்போது கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, ஏகப்பட்ட சலுகைகளை அளித்து ஆட்களை எடுக்கும் நிறுவனங்களோ தங்களுக்கு தேவை இல்லை என்கிற நிலை வரும்போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை தூக்கி எறிகின்றன. இதை நாம் கண்டும் காணாமல் இருப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய ஒரு பொருளாதார பாதிப்பை கொண்டு வந்து சேர்த்து விடும். வேலை செய்யும் ஆட்கள் தங்கள் வேலையை விட்டு நிற்க வேண்டும் என்றால் மூன்று மாதம் முன்பே தெரிவிக்க வேண்டும் என்று கூறும் இந்த நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையில்லை என்றால் உடனே தூக்கி எறிவது ஏன்? அந்த தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதனை யார் தட்டிக் கேட்கப் போவது? இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் வேலையின்மை என்பது மிகவும் அபாயகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. என்று தனியும் இந்த தாகம்? ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *