வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை… நீதிபதிகள் நேரடி ஆய்வு..!

chennai high court

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையிட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி வேல்முருகன் இன்று வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த 1992 ஆம் ஆண்டு வாட்சாத்தி கிராமத்தில் சந்தன கட்டைகளை பதிக்கி வைத்திருப்பதாக கூறி தமிழக போலீசார் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் பழங்குடியினர்களான அக்ராம மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதில் பல பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இது தொடர்பாக கடந்த 1996 ஆம் ஆண்டு சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் உயிருடன் உள்ள 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து. இதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நாலு ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரால் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டது இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சற்றப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி வேல்முருகன் முன்பாக நடந்தது

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத் ஜான் சத்யன் ரமேஷ் உள்பட பல ஆஜராகி வாதித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி வேல்முருகன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர் மேலும் இன்று சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நீதிபதி வே பி வேல்முருகன் நேரடியாக ஆய்வை மேற்கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *