மோட்டார் வாகன திருத்தச்  சட்டத்தை திரும்ப பெறக்கோரி… சாலை மறியல்…!

மோட்டார் வாகன திருத்தச்  சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து சேலம் புதிய பேருந்து நிலைய அருகே சிஐடியு சங்கம்  சார்பில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…..

ஆன்லைன் அபராத நடைமுறையை  கைவிட வேண்டும் , கார்ப்பரேட்டர்களுக்கு ஆதரவான மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு , சுங்க கட்டணம் விலை உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்   சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

சிஐடியு  மாவட்ட  தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல்  போராட்டத்தில் ஏராளமானோர்  கலந்து கொண்டு,  தங்கள் ஆட்டோ மற்றும்  வாகனங்களை  15 நிமிடம் நிறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது   ஒன்றிய அரசின்  நடவடிக்கையை  கண்டித்து  கோஷங்கள் எழுப்பினர் . 

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக  திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை ,  மக்கள் பயன்பெறும் வகையில்  திருத்தம் செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் ,  டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் , சுங்க கட்டண விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதனால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *