ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்… நல்லவங்க கூட்டுக்காரன்…

 வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு அது எப்போதும் மற்றவரை ஏமாற்றாது என்ற கூற்றை மறுபடியும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் நிரூபித்து காட்டி உள்ளார். பொதுவாக வேகமாக ஓடும் வாழ்க்கையில் நாம் நினைத்த இடத்திற்கு வேகமாகவும் அதே நேரம் பாதுகாப்பாகவும் சென்று சேர்வது ஆட்டோ மூலமாகத்தான். பயணத்திற்கு பணம் வாங்கும் விஷயத்தில் சற்று விமர்சனங்கள் இருந்தாலும் அவசரத்திற்கும் அபாயத்திற்கும் உடனடியாக வந்து நிற்பது ஆட்டோ ஓட்டுனர்கள் தான். 

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மெட்ரோ திட்டங்கள் போன்ற பல விஷயங்கள் அவர்களுக்கு பிரச்சனை தரக்கூடியதாக இருந்தாலும் பல ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் நேர்மையை ஒருபோதும் தவறுவதே இல்லை. அதை ஒரு ஆட்டோ ஓட்டுனர் மீண்டும் நிரூபித்துள்ளார். ராஜஸ்தானி சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்க ஆன்மீக சுற்றுலா வந்துள்ளனர். அப்போது யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் இருந்து காலை ஆட்டோவில் கிளம்பி உலகப் புகழ்பெற்ற அத்திவரதர் கோயிலுக்கு சென்று உள்ளனர். 

ஆட்டோவை பூபாலன் என்ற ஆட்டோ ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். அந்த ராஜஸ்தான் நபரை கோவிலில் விட்டு விட்டு வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்துள்ளார் பூபாலன். வீட்டிற்கு வந்தவர் ஆட்டோவை விட்டு இறங்கும்போது பின்னே இருக்கையில் ஒரு பை இருந்ததை கவனித்துள்ளார். அந்தப் பையை திறந்து பார்த்த போது அதில் 50 ஆயிரம் ரொக்கமும். ஏடிஎம் அட்டை அடையாள அட்டை போன்ற பொருள்களும் அதில் இருந்துள்ளன. அந்த அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்தை பார்த்த பூபாலன் உடனே அது காலை தன்னுடன் அத்திவரதர் கோயிலுக்கு சென்ற பயணி உடையது என்பதை தெரிந்து கொண்டார். 

உடனே அவர் அந்த பயணி தங்கியிருந்த ராத்திரி வாஸ் விடுதிக்குச் சென்று அவரை தேடி அவரிடம் அந்தத் தொகையையும் மற்ற பொருட்களையும் ஒப்படைத்தார். நையாண்டி போன அந்தப் பையனையும் அவரது குடும்பமும் மகிழ்ச்சியில் கண் கலங்கி அவரை வாழ்த்தி கொண்டாடினர். தமிழ் மண்ணின் பெருமையை பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும் இப்போது முதல் முறை அதனை நேரில் கண்டதாகவும் அந்தப் பயணி கூறி மகிழ்ந்தார். 

தமிழர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல இடங்களில் வஞ்சிக்கப்பட்டாலும் தாங்கள் உதவும் குணத்தையும் கருணை உள்ளத்தையும் நேர்மையையும் எப்போதும் மறக்க மாட்டார்கள் என்பதனை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

வெங்கட்ராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *