விவசாயிகளின் அழிவு… நாட்டின் பேரழிவு…. 

நாம கஷ்டப்பட்டு படிச்சு ஒரு வேலைக்கு சென்று மாதம் முழுவதும் இரவு பகல் பாராமல் வேலை செய்து நமக்கு சம்பளம் 2 ரூபா குடுத்தா எப்படி இருக்கும்? அப்படிதான் ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாவட்டத்தில ஒரு விவசாயிக்கு நடந்திருக்கு. இந்திய நாட்டின் முதுகெலும்புகள் விவசாயிகள் தான். நாட்டின் பாதிக்கு மேல் இருக்கும் நிலங்கள் விவசாய நிலங்கள் தான். இப்படி நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டதோ என்று தோன்றுகிறது. 

இன்று பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளிடமோ அல்லது கல்லூரி செல்லும் இளைஞர்களிடமோ நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்று கேள்வி கேட்டால்,  நான் டாக்டராகவோ அல்லது இன்ஜினியராகவோ ஆகப் போகிறேன் என்று தான் கூறுகிறார்களே தவிர ஒருவர் வாயிலிருந்தும் நான் விவசாயி ஆகப் போகிறேன் என்று வருவதே இல்லை. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் நீ படித்து பெரிய விவசாயியாக வேண்டும் என்று கூறுவதும் இல்லை. ஏனென்றால் விவசாயத் தொழிலும் விவசாயிகளின் நிலைமையும் அவ்வளவு பரிதாபமாக சென்று கொண்டிருக்கிறது. 

நான் ஒரு பொருளை உருவாக்கினாலோ அல்லது நான் ஒரு கருவியை கண்டுபிடித்தாலோ, நான் தான் அந்த பொருளுக்கு உண்டான தொகையை நிர்ணயிக்க வேண்டும். இதுதான் தர்மம். ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் தாங்கள் வெளியே வைக்கும் பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையை நம் நாடு இன்னும் தரவில்லை. விவசாயிகளைப் பற்றி அனைத்து தொலைக்காட்சிகளிலும் அனைத்து விவாதங்களிலும் அனைத்து பேச்சு போட்டிகளிலும் பெருமையாக பேசுகிறோமே தவிர அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை களைய நாம் ஒருவரும் முயற்சிப்பது இல்லை. 

அதற்கு உதாரணம் தான் அடுத்து வரும் சம்பவம். ஒரு விவசாயி 512 கிலோ மூட்டை வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதனை விற்பதற்காக அதனை வண்டியில் ஏற்றிக்கொண்டு வேளாண் விற்பனை மண்டிக்கு கொண்டு வந்துள்ளார். அங்கே இருந்தவர்கள் ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு மட்டுமே வாங்குவோம் என்று கூறிவிட்டனர். வேறு வழி இல்லாமல் அனைத்து வெங்காயத்தையும் சேர்த்து 512 ரூபாய்க்கு விற்று விட்டார். 

இதில் சோகம் என்னவென்றால் அவருக்கு போக்குவரத்து செலவே 509 ரூபாய் ஆனது. ஆக அந்த விவசாயிக்கு லாபம் 2 ரூபாய் மட்டுமே. அந்த விவசாயி மனம் உடைந்து இது மொத்த விவசாயிகளுக்குமே அவமானம் என்று கூறிவிட்டு சென்றார். இதை நாம் சாதாரணமாக கடந்து சென்றால் நாம் எதிர்காலத்தில் வங்கி கடன் வாங்கி அரிசி வாங்கும் நிலைமை ஏற்படலாம். ஏனென்றால் விவசாயிகள் இல்லை என்றால் விவசாயம் பெரிய நிறுவனங்களிடம் சென்று விடும். அப்படி சென்று விட்டாள் நாம் வங்கி கடன் வாங்கி அரிசி வாங்கும் நிலைமை ஏற்படலாம். விழித்துக்கொள்.

-வெங்கட்ராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *