5ஜி செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…

தூத்துக்குடி முத்தையாபுரத்தில்  குடியிருப்பு பகுதிக்குள் அமெரிக்க நிறுவனம் சார்பில் 5g சேவைக்கான செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மின் இணைப்பு வழங்க வந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தம்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதி உள்ள முத்தையாபுரம் வடக்கு தெரு பகுதியில் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த பகுதியில் அமெரிக்காவை சேர்ந்த ஏ டி சி டெலிகாம் நிறுவனம் சார்பில் 5g சேவைக்கான செல்போன் டவர் அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிகள், அங்கன்வாடி மையம் ஆகியவை இருப்பதால் கதிர்வீச்சு காரணமாக பாதிப்பு ஏற்படும் எனக்கூறி  இந்த செல்போன் டவர் அமைக்க அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 இதன் காரணமாக செல்போன் டவர் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அந்தப் பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர் பின்னர் உதவியாளர் துணை ஆட்சித் தலைவர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று குடியிருப்பு பகுதிகளில் இருந்து செல்போன் டவர் அகற்றப்பட்டு ஒரு கிலோமீட்டர் தொலைவு அப்பால் நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செல்போன் டவருக்கு மின் இணைப்பு வழங்க தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளனர் இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் திரண்ட பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க ஏற்கனவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். எனவே மின் இணைப்பு வழங்கக் கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மின் இணைப்பு வழங்கும் பணியையும் தடுத்து நிறுத்தினர் இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *