போதைப் பவுடர் கலந்த கள் விற்பனை… பள்ளி மாணவர்கள் சீரழிவதாக குற்றச்சாட்டு…!

சின்னசேலம் அருகே பதனீர்க்கு அனுமதி பெற்று போதைப் பவுடர் கலந்த கள் விற்பனை அமோகம்.. பள்ளி மாணவர்கள் சீரழிவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல்துறை தென்னை மரத்தில் உள்ள கள் பானைகளை உடைத்து அழிப்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வீ.அலம்பளம், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தென்னை மரங்களில் பதநீர் என்ற பெயரில் போதை தரும் கள் இறக்கப்படுகிறது. இந்த போதை பவுடர் கலந்த கள்ளை குடிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இப்போதைக்கு அடிமையாகிறார்கள் எனவும் கல்லைக் குடித்த மாணவர்கள் சின்னசேலம் ரயில்வே நிலைய பகுதிகளில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லாமல் அங்கு போதையில் உறங்குவதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்படுவதால்  போதை பவுடர் கலந்த கள்  இறக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போலீசாரிடம் தெரிவித்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின்பேரில் கீழ்குப்பம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் ராமதாஸ், ஆதிமூலம் உள்ளிட்ட போலீசார் வீ.அலம்பளம் கிராமத்திற்கு சென்று தென்னை மரங்களில் கள் இறக்க கட்டியிருந்த பாணைகளை ஏணி வைத்து ஏறி தடியால் அடித்து உடைத்தெறிந்தனர். 

மேலும் அனுமதியின்றி கள் இறக்கிய பெத்தாசமுத்திரத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பதநீர் இறக்குவதாக அனுமதி பெற்றுக்கொண்டு பதனி என்ற பெயரில் கள் இறக்க தென்னை மரங்களை விடுபவர்கள் மீதும், கள் இறக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட காவல்துறை கடுமையாக எச்சரித்தனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *