போலி சீலிட்ட வங்கி ரசீது மூலம் பைக்கை வாங்கி எஸ்கேப் ஆன பலே ஆசாமி…!

கோவை போத்தனூரில் வசிப்பவர் முகமது ரபீக் .முகமது ரபீக் மொபைல் ஷாப் நடத்தி வருகின்றார். இவரிடமிருந்த தனது இருச்சகர வாகனத்தை விற்க olx இணைய தளத்தில் விளம்பரம் தந்திருக்கின்றார். இதனை பார்த்த ரமேஷ் என்ற நபர் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகபடுத்தி, வாகனம் தேவைப்படுவதாக ஃபோனில் தெரிவித்திருக்கின்றார். வெரைட்டி ஹால் பகுதிக்கு வண்டியை கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றான் அதற்கு சம்மதித்த முகமது ரபீக் தனது இருசக்கர வாகனத்துடன் வெரைட்டி ஹால் ரோடு பகுதிக்கு சென்றிருக்கின்றார். 

இருசக்கரவாகனத்தை பரிசோதித்த ரமேஷ், வாகனம் நன்றாக உள்ளது, அதனை வாங்கி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவழியாக பேர்ம் பேசி 98,000 ரூபாய் க்கு வாகனத்தை வாங்கி கொள்வதற்காக ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து தான் ரொக்கமாக தரமுடியாது, வங்கி கணக்கிலேயே பணத்தை செலுத்தி விடுவதாக ரமேஷ் தெரிவித்திருக்கின்றான். 

இதனை நம்பி முகமது ரபீக், ரமேஷ் அழைத்த வங்கிக்கு சென்றிருக்கின்றார் . அப்போது வங்கிக்கு வெளியே முகமது ரபீக்கை நிறுத்தி விட்டு வங்கிக்கு உள்ளே சென்ற ரமேஷ், பணம் கட்டியதற்கான ரசீதை எடுத்து வந்து முகமது ரபீக்கிடம் தந்திருக்கின்றார். வங்கிகணக்கில் பணம் வந்துவிட்டதாக எண்ணி முகமது ரபீக், ரசீதை பெற்றுகொண்டு, இருசக்கர வாகனத்தை ரமேஷிடம் ஒப்படைத்திருக்கிறார். வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் தப்பினார். 

பிறகு அந்த ரசீதை கொண்டு வங்கியில் தனக்கு கணக்கை சரிபார்க்க சென்ற போது முகமது ரபீக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த நிலையில் வங்கி மேலாளரிடம் கேட்டபோது அந்த பரிசீலனையே நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். போலீயாக சீலிட்டு வங்கி ரசீது போன்ற போலீயான ஒரு ரசீதை கொடுத்து ஏமாற்றியதை உணர்ந்த முகமது ரபீக் இது தொடர்பு முகமது ரபீக் வெரைட்டி ஹால் ரோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கரவாகனத்தியுடன் தப்பிய நபரை தேடி வருகின்றனர்..

வழக்கமாக விளம்பரத்தை பார்த்துவிட்டு வருபவர்கள் வாகனத்தை ஓட்டுபார்க்க வேண்டும் என கூறி வாகனத்துடன் தப்புபவர்கள், போலி காசோலைகள் கொடுத்து ஏமாற்றிபவர்கள் உலாவி வந்த நிலையிலே தற்போது வங்கி ரசீதையே போலீயாக தயார் செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *