மூச்சு திணறிய ஒரு வயது குழந்தை… அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செய்த செயல்…! 

Child birth

மூச்சு குழாயில் மாட்டிய மிளகு உள்நோக்கு கருவியை பயன்படுத்தி மிளை வெளியேற்றிய மருத்துவர்கள் குழு திருப்பூரைச் சேர்ந்த 1 வயது 4 மாத ஆண் குழந்தை திடீரென்று  மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.   

அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. சி டி ஸ்கேனில் அந்த குழந்தையின் மூச்சு குழாயில் அயல் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி பார்த்த பொழுது மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி  இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தன.  

அந்த குழந்தைக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த மிளகு அகற்றப்பட்டது. தக்க சமயத்தில் மருத்துவர்கள் தந்திருக்கின்ற சிகிச்சையினால் குழந்தையின்  உயிர் காப்பாற்றப்பட்டது. காது,மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் DR.V.சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பேராசிரியர் Dr.கல்யாண சுந்தரம் தலைமையில்  மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சை முறையினை செய்திருக்கின்றனர். 

மருத்துவக்கல்லூரி மருத்துவமணை முதல்வர் நிர்மலா மருத்துவக் குழுவினரை பாராட்டியிரிக்கின்.  தற்பொழுது குழந்தை நலமாக உள்ளது. குழந்தைகளுக்கு தீடிரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் எந்தவித தாமதமின்றி மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *