ஆந்திராவில் ஆம்புலன்ஸ் இல்லாமல் இறந்த குழந்தையை 120கி.மீ பைக்கில் கொண்டு சென்ற பரிதாபம்…

death

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்து 15 நாட்களான குழந்தை இறந்த நிலையில் அதனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் 120 கிலோமீட்டர் ஸ்கூட்டியில் கொண்டு சென்ற தம்பதியினர் 

ஆந்திராவில் மற்றொரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.  விசாகா மாவட்டத்தில் குழந்தையின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல வழியின்றி 120 கிலோமீட்டர் தூரம் ஸ்கூட்டியில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், முஞ்சிங்கிப்புட்டு மண்டலம் குமடாவை சேர்ந்த மகேஸ்வரி – கொண்டபாபு தம்பதிக்கு உள்ளனர். மகேஸ்வரிக்கு 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்கு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு 20 நாட்களுக்கு முன்பு  வந்தனர்.அங்கு மருத்துவ மனையில் 15 தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தை இறந்து விட்டது. 

இதனால் குழந்தையை  வீட்டிற்கு அழைத்துச் செல்ல குழந்தையின் பெற்றோர் மருத்துவ மனையில் ஆம்புலன்சை கேட்டனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் சரியாக பதில் சொல்லவில்லை.  இதனால் 120 கி.மீ., தொலைவில் உள்ள படேருக்கு, குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி, ஸ்கூட்டியில் தம்பதியர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த படேரு மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல ஏற்பாடு செய்தனர்.   அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தங்கள் குழந்தையை இழந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

 அம்புல்ன்ஸ் ஏற்பாடு செய்வதற்குள் குழந்தையுடன் ஸ்கூட்டியில் சென்று விட்டதாக மருத்துவ மனை நிர்வாகம் விசாகப்பட்டிணம் அரசு மருத்துவ மனை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா கூறுமையில் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை இறந்துவிட்டதாக வாய்மொழியாக தகவல் வந்ததாகவும், பதிவேடு வேலை செய்ய சிறிது நேரம் ஆகும் என்றும் தெரிவித்தனர்.   குழந்தையின் சடலத்தை கொண்டு செல்ல வாகனங்களை தயார் செய்து வந்தனர். மருத்துவ மனை கேஸ் ஷீட்கள் எங்களுக்கு கிடைத்த 15 நிமிடங்களில் வாகனம் ஏற்பாடு செய்யப்படும்.  

வாகனத்தை ஏற்பாடு செய்வதற்குள் குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டியில் சென்று விட்டனர்.    இரண்டு முறை போன் செய்தபோது நாங்கள் ஸ்கூட்டியில்  கிளம்பிவிட்டேன் என்றனர். இதனால் படேருவில் பேசி வாகனத்தை ஏற்பாடு செய்தோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *