நடைபாதையை சிலர் தடுத்ததால் கர்ப்பிணி நடந்த சோகம்… மக்கள் ஆர்ப்பாட்டம்…! 

ஓசூர் தடுத் காலம் காலமாக சென்ற பொதுப் பாதை விட மறுத்தலால், கர்ப்பிணி பெண் தவிப்பு, அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் பரபரப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே நஞ்சுண்டபாளையம் என்ற மலை கிராமம், இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர், இக்கிரமத்தினர் சிலர் தங்களுடைய விவசாய தோட்டத்திலே வீடுகளை கட்டியும் வசித்து வருகின்றனர்

இந்நிலையில் நரசிம்மன் மற்றும் உறவினர்கள் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் நஞ்சுண்டபாளையம் கிராமத்தில் இருந்து அலசட்டி கிராமத்திற்கு செல்லவேண்டுமெனில் சீனப்பா மற்றும் நாராயணசாமி என்பவரின் தோட்டத்தின் வழியாக காலங்காலமாக பொது பாதையாக ஊருக்கு சென்று வந்துள்ளனர்

இந்த நிலையில் சீனப்பா மற்றும் நாராயணசாமி தங்களுடைய விவசாய தோட்டத்தில் செல்லக்கூடாது என நரசிம்மன் மற்றும் உறவினர்களுக்கு பாதை விட மறுத்து உழவு பணியை மேற்கொண்டு உள்ளனர், கிராம மக்கள் இது சம்பந்தமாக வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்கதலால்.

அங்கு பாதை கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவதில் ஈடுபட்டு முற்றுகையில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுயில் சில நேரம் பரபரப்பு காணப்பட்டது

இந்நிலையில் அலசட்டி கிராமத்தை சேர்ந்த  நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பாதையில்லாமல் விவசாயத் தோட்டத்தில் சிரமம்பட்டு நடந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சென்றார் மேலும் இது குறித்து  தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் ஓசூர் சார் ஆட்சியரிடம் சுமூக தீர்வுகாணப்படும் என அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனர், அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்

பாதை குறித்து மாணவர்கள் கர்ப்பிணி பெண் தெரிவிக்கையில் சுமார் நூறு ஆண்டு காலமாக கிராம மக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர் ஆனால் தற்போது வழி விடுவதில்லை என தெரிவித்து உழவு செய்துள்ளனர் இதனால் அலசட்டிக்கு செல்ல வழியில்லாமல் நாங்கள் சிரமப்பட்டு செல்கிறோம்,மேலும் ஊருக்கு செல்ல காட்டு வழி பாதையாக நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது குறிப்பாக மழைக்காலங்களில் அதிகப்படியான மழை வந்தால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்தோம் என தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *