பட்ஜெட்: செல்போன், டிவி, சைக்கிள் விலை குறைகிறது…

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.
சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.
டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.
இனி பான் கார்டு பொது அடையாள அட்டை:
பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்மூலம், நாடு முழுவதும் இனி பான் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.
அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்