வருகிற 21ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திருமண்டங்குடி  திருஆரூரான் சர்க்கரை ஆலை  கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வருகிற 21 ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட  உள்ளதாக  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்  சாமி. நடராஜன் தஞ்சையில் பேட்டி:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன்  தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருமண்டங்குடியில்  திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் செயல்பட்டு வந்தது

அந்த ஆலை  நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பல்வேறு வங்கிகளில் விவசாயிகளுக்கு தெரியாமலேயே,  விவசாயிகளின் பெயரில் சுமார் 200 கோடி ரூபாய் கடன் வாங்கியது. இதனை அறிந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலை நிர்வாகம் மூடப்பட்டது. மூடப்பட்ட ஆலை நிர்வாகத்தை கால்ஸ் என்ற நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  விவசாயிகள் பெயரில் முறைகேடாக கடன் பெற்றுள்ளதால், வங்கிகளில் புதிய கடன் வாங்கமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே வங்கிகளில் உள்ள கடன் பிரச்சினையை  தீர்க்க வேண்டும்,  

முந்தய ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும், ஆலை  நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், மேலும் வெட்டு கூலி, வாகன கூலி ஆகியவற்றிற்கு 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 31ம் தேதி முதல் ஆலை வளாகம் முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இன்று 50 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில்,  50 நாட்களாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. எனவே உடனடியாக கரும்பு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று அவர்களின்  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 21 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட  உள்ளதாக அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *