பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க ரூ.72.38கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் கரும்பு கொள்முதல் தொடர்பாகவும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

1.
பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

  1. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும் (வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு, போக்குவரத்து செலவு, விவசாயிகளுக்கு வழங்கும் தொகை உட்பட)
  2. கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  3. கொள்முதல் செய்யப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.
  4. நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது.
  5. அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது.
  6. கரும்பு கொள்முதல் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கீழ்க்கண்ட உறுப்பினர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழுக்களை தேவையான எண்ணிக்கையில் உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும்.

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் (சங்கத்தின் பெயர், மற்றும் விவரம், மேலாண் இயக்குநர் பெயர் மற்றும் பதவி கூட்டுறவு சார்பதிவாளர் பெயர் மற்றும் பதவி வேளாண்மை அலுவலர் துணை வேளாண்மை அலுவலர் பெயர் மற்றும் பதவி

  1. சென்னையைப் பொருத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் பின்வருமாறு தேவையான எண்ணிக்கையில் கரும்பு கொள்முதல் குழுக்களை அமைத்து, அக்குழுக்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்திட ஆணையிட வேண்டும்.

9.கடந்த ஆண்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யபட்ட தொகைக்கு குறைவான தொகைக்கு கரும்பு கொள்முதல் செய்ய கூடாது

9.
எந்தவித புகார்களுக்கு இடம் அளிக்காமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்

10.ஒரு கிராமத்தில் ஒரே விவசாயிடமிருந்து மொத்த கரும்பையும் கொள்முதல் செய்ய கூடாது அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பரவலாக அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும்

11.கரும்பு கொள்முதல் செய்யும்போது சிறு குறு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கபட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *