18 வயதுக்குட்பட்டவர் பைக் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் – சங்கர் ஜீவால்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட சைபர் கிரைம் ஹேக்கதான் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு சான்றிதழ் கோப்பை பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர சைபர் கிரைம் குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, துணை காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி உட்பட காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி சேர்ந்த பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால்:-

புத்தாண்டு பண்டிகைக்கு இரவு நேரங்களில் விழா நடத்த திட்டமிட்டு உள்ள விடுதி உரிமையாளர்களுடன் வருகின்ற 29-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த  திட்டமிட்டு உள்ளோம்,அனுமதி வழங்கப்படும் நபர்களை கடந்து கூட்டம் சேர்க்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பேச உள்ளோம்.

இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

புத்தாண்டு நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கபட்டால் அவர்கள் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

சென்னையில் சைபர் கிரைம்  குற்றங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.முதலில் ஒரு காவல் நிலையம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 5 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள நகரங்களை பார்த்தால் சென்னையில் தான் குறைந்த அளவில் குற்றங்கள் நடைபெறுகிறது.பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும் காவல்துறை மீது பெரிய அளவில் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது அதை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட ஹேக்கதான் நிகழ்ச்சியில் நாங்கள் எதிர்பார்த்த அளவில் மாணவர்கள் தேர்வு இருந்ததால் பங்கேற்கவில்லை, இருப்பினும் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நன்றி.

மீண்டும் பிப்ரவரி மாததால் பெரிய அளவில் ஹெக்கதான் நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தானியங்கி போக்குவரத்து அமைப்பு (Automatic traffic control) உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

500 கோடி மதிப்பீட்டில் இதனை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தானியங்கி போக்குவரத்து அமைப்பு சென்சார் வழிகளில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில் சென்னையில் CCTV பயன்படுத்தி அமைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *