விரைவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மாதம்தோறும் மின் கணக்கீடு… செந்தில்பாலாஜி அறிக்கை

கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000  இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கி உள்ள நிலையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது

இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நவம்பர் 11 ஆம் தேதி 20 ஆயிரம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டது.தற்போது வரை 34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 15 ஆயிரத்து 866 பேருக்கு பொங்கலுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாகனம் தாக்கப்பட்டு குறித்த கேள்விக்கு கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் 12 உறுப்பினர்கள் 1 உறுப்பினர் வரவில்லை. வாக்கு பதிவு நடத்தி வாக்கு எண்ணலாம் ஆனால் முடிவு அறிவிக்கப்பட கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மேற்கொண்டு எதையும் தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்

மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் 1 கோடியே 70 லட்சம் பேர் நேற்று வரை இணைதுள்ளனர். வீடு வாரியாக கணக்கு எடுக்க பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு எடுக்க உள்ளார்கள். 

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட உள்ளது. அது 2 ஆண்டுகளுக்கு உள்ளாக முடிக்கப்பட்டு விட்டால் கூட கூடுதலாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டால் அவர்களுக்கு  பின்னர் என்ன வேலை தருவது என்ற   குழப்பம் வரும் எனவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்

தற்போதைய மின் தேவை 2021 ம் ஆண்டில் 32000 மெகாவாட் உற்பத்தி தேவையாக உள்ளது 2030 ஆண்டிற்குள் 65 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தெரிவித்தார் இது தற்போதையுள்ள தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *