ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை கண்டுகொள்ளாத ஆளுநரை கண்டித்து தூக்கில் தொங்கும் போராட்டம்

ஆன்லைன் ரம்மியை  ரத்து செய்யும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்தும்,  ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சேலம்  தபால் நிலையம் முன்பாக   தூக்கு மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு……

தமிழகத்தில் ஆன்லைன்  ரம்மியால் இளைஞர்கள் ஏராளமான அடுத்தடுத்து தற்கொலை செய்து உயிரை மாய்த்து வருகின்றனர். எனவே ஆன் லைன்  ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது. இவரை எடுத்து ஆளுநரின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் இதுவரை கையெழுத்திடவில்லை.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் கையொப்பம் இட  வேண்டுமென பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர் . இந்த நிலையில் இன்று  சேலம் மத்திய தபால் நிலையம்  முன்பாக  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்,  மாவட்ட செயலாளர் பெரியசாமி தலமையில் 20க்கும் மேற்பட்டோர்,  ஆன்லைன் ரம்மியை தடை விதிக்க வலியுறுத்தியும் ,  ஆன்லைன் ரம்மி  தடை சட்டத்திற்கு  ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்தும், கழுத்தில்  தூக்கு கயிறு  மாட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அப்போது தமிழக ஆளுநரை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய  பதாகைகளை  ஏந்தியப்படி, ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . 

 இதனைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரியசாமி கூறும் போது , ஆன்லைன் ரம்மியால் கூலித் தொழிலாளி முதல் அனைத்து தரப்பினரும் லட்சக்கணக்கில் பணத்தை  இழக்கின்றனர். ஆன்லைன் விளையாட கடன் வாங்குகின்றனர்.  பின்னர் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பிறகு,  கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

எனவே மக்களின் நலன் கருதி ஆன்லைன் ரம்மி சூதாட்ட  தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *