விவசாயிகளுக்கே தெரியாமல் 300 ஏக்கர் விவசாய நிலத்தை ஆட்டயப்போட்ட தனியார் நிறுவனம்… 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பிஏசிஎல் என்ற தனியார் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் 300-க்கும் மேற்பட்ட ஏக்கருக்கு போலி ஆவணங்கள் மூலம் பவர் பெற்று மோசடி செய்து விட்டதாகவும் இதனால் விவசாயிகள் அவர்களது நிலத்தை விற்க முடியாமலும் நிலத்தை வைத்து கடன் வாங்க முடியாமலும் தவித்து வருவதாகவும் அதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக முதலமைச்சரும் இதில் தலையிட்டு தனியார் நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் வாங்கிய நிலத்திற்கான பவரை ரத்து செய்துவிட்டு விவசாயிகளின் சொத்துக்களை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட வெட்டுக்காடு மற்றும் இருந்திராப்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் 300க்கு மேற்பட்ட ஏக்கரில் உள்ள விளைநிலங்களை பிஏசிஎல் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் நிலங்களுக்கு பதிவுத்துறையின் மூலம் பவர் பெற்று உள்ளதாகவும் 

இதனால் தலைமுறை தலைமுறையாக விவசாயிகளுக்கு சொந்தமான சொத்துக்களை விற்க முடியாமலும் சொத்துக்கள் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருவதாகவும் எங்கு சென்றாலும் விவசாயிகளின் நிலங்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் எடுக்கும் பொழுது பிஏசிஎல் நிறுவன பெயர் வருவதாகவும் 

இதனால் பாதிப்பை சந்தித்து வரும் வெட்டிக்காடு மற்றும் இருந்திராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து போலி ஆவணங்கள் மூலம் விலை நிலங்களுக்கு பவர் பெற்றுள்ள பிஏசிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கு வாங்கி உள்ள பவரை ரத்து செய்து விவசாயிகளின் சொத்துக்களை மீட்டு தர தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *