தீண்டாமை தடுப்பு சுவர் கட்டிய காவல்துறை ஐ.ஜி… தீவுக்குள் சிக்கிய மக்கள் வேதனை

ஆதிதிராவிடர் மக்கள்  குடியிருப்பு சுற்றி தீண்டாமை தடுப்பு வேலிகள். திருவள்ளூர் பூண்டி அடுத்த அல்லிக்குழி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் சுற்றி அடைக்கப்பட்டுள்ள தீண்டாமை   தடுப்பு வேலிகளை  அரசு அகற்ற வேண்டும் என மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த அல்லிக்குழி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் 10  மேற்பட்ட ஆதிதிராவிட குடியிருப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மக்கள் வசிக்கும் எதிர் திசையில் சென்னையை  சேர்ந்த முன்னாள் காவல்துறை ஐ.ஜி. ரஞ்சித் ராஜ் வில்லியம் மனைவி பிரியராஜ் வில்லியம் பெயரில் பண்ணை வீடு வாங்கி உள்ளார்.

அந்த  பண்ணை வீட்டிற்கு எதிரில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு நிலமும் தன்னுடைய நிலம் என கூறி அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஆதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் சுற்றி தகர தடுப்புகள் முள்வேலிகள் அமைத்து மக்களை சிறையில் அடைப்பது போல்  வைத்துள்ளார்.

இதனால்  அப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு   செல்வதற்கும்  ஆடு மாடுகள் மேய்ப்பதற்கும் குழந்தைகள் விளையாடுவதற்கும் இடமில்லாமல் சிறையில் அடைபட்டது போல் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களுக்கு அப்பகுதியில் 35 ஆண்டுகள் முன்பு  அப்பகுதியில்  வனத்துறை பாதுகாவலராக பணியாற்றி வந்த வேலாயுதம் என்பவர் தலா 

15,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு நிலத்திற்கான எழுத்துப்பூர்வமான எந்த ஆவணங்களும் அளிக்காமல் ஏமாற்றி விட்டதாகவும்.

அதன் பிறகு 35 ஆண்டுகாலம் அப்பகுதியில் தங்கள் வசித்து வருவதால் தங்களுக்கு அரசு சார்ந்த ஆதார் குடும்ப அட்டை மின் அட்டை  வாக்காளர் அடையாள அட்டை குடிநீர் இணைப்புக்கான வரி செலுத்தும் ஆவணங்கள் போன்ற  அரசு ஆவணங்கள் வைத்திருப்பதாகவும்.

தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா  கேட்டு நடந்த 30 வருடங்களாக மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் பட்டா அளிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றும். தற்போது தங்களை சிறையில் அடைப்பது போன்று தங்களுடைய வீடுகளை சுற்றி தகரத் தடுப்புகள் முள்வேலிகள் அடைத்திருப்பதால் கூலி வேலைக்கு செல்லக்கூடிய தாங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்து இருப்பதாகவும் .

உடனடியாக அரசு தங்களுக்கு குடியிருப்பு பகுதியில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள  தீண்டாமை தடுப்பு வேலிகளை அகற்றி தங்களுக்கு அப்பகுதிகள் நிரந்தரமாக குடியிருப்பதற்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *