நியாயவிலை கடைகளில் இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை முதன்மை செயலர் அதிரடி

நியாயவிலை கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க நியாயவிலை கடைகளுக்கு இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடைசெய்யபட்டு உள்ளதாக முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விவசாயிகளுக்கு நெற்களம் அமைத்து விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கும் விழா இன்று நடந்தது. 

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நலத்துறை முதன்மை செயலரான ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்டு விவசாயிகளுக்கான அமைக்கப்பட்ட நெற்களத்தை தொடங்கி வைத்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “

தச்சூர் கிராமத்தில் மனம் என்னும் தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது இது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பல்வேறு வெளிநாடுகள் உட்பட பல இடங்களில் பணிபுரிந்தாலும் தங்கள் பிறந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டி இந்த மணம் என்னும் தொண்டு இயக்கத்தை நிறுவியுள்ளனர்

உள்ளனர்அவசியத்தால் இவர்களால் அமைக்கதொண்டு நிறுவனம் மூலம் இந்த கிராமத்திற்க்கு தேவை பட்ட நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர் இந்த ஆண்டு நெற்களம் மற்றும் 50 விவசாயிகளுக்கு இலவசமாக தார்பாய் வழங்கினர் 

இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையான கிராமத்திற்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் கண்டிப்பாக நான் உறுதியளித்துள்ளேன் இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இக் கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் 

மேலும் தமிழக முதல்வர் அவர்கள்மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருள்களும் தரமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார் அதன் பெயரில் தற்பொழுது அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன

ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது  ஆகவே இதை தடுக்கும் வகையில் நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் லாரிகளில் வாகனங்களில் இரவு நேரங்களில் ஏற்றி செல்ல நாங்கள் தடை வித்துள்ளோம் பகல் நேரங்களில் பொருட்கள் இறக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் தரமற்ற பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக மாற்றி மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் 

ஆகவே இனிவரும் காலங்களில் மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த ஆண்டு நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் அதை உடனடியாக அப்படியே அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்து தரமான அரிசியாக தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்துள்ளனர் என இவ்வாறு தெரிந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *