பல லட்சத்தை ஆட்டயப்போட்ட நிதி நிறுவன ஊழியர்… வச்சு செஞ்ச போலீசார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் அம்மன் நிதி நிறுவனம் இயங்கி வருகின்றன. 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களுக்கு இவர்கள் கடனுதவி செய்துவருகின்றனர். ஏஜெண்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விவேகானந்தன் (31)  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக பணியில் சேர்ந்திருக்கின்றார். மாதந்தோறும் கடன் வசூலித்து நிதி நிறுவனத்தில் செலுத்துவது இவரது பணி. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதியில் இருந்து விவேகானந்தன் திடீரென வேலைக்கு வரவில்லை. 

அப்போது அவரை தொடர்புகொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிதி நிறுவனத்தினர் நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதிநிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை அவர் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.  மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். 

விசாரணையில் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விவேகானந்தன் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த விவேகானந்தனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *