தமிழகத்தில் முதன்முறையாக வீடுதேடிவரும் நடமாடும் மயான சேவை திட்டம்

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும்  மயான சேவை திட்டம் ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் வீடுகளுக்கே வரும் எரி தகன வாகனத்தின் மூலம் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.. 

ஈரோட்டில் மாநகராட்சியுடன் இணைந்து ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை அமைப்பினர்  மின் மயானத்தை நடத்தி வருகின்றனர்.. இங்கு நகர் பகுதிகளில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கொண்டு வரப்பட்டு ஏரியூட்டப்படுகின்றன.  இவர்களின் அடுத்த முயற்சியாக கிராமப்புற மக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கில் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. 

இதற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் திருச்சூரில் பிரத்யேகமாக தகன மேடை வடிவமைத்து கொண்டு வந்துள்ளனர். , கிராமப்பகுதிகளில் எவ்வித சிரமமும் இல்லாமல் சடலத்தை ஒரு மணி நேரத்தில் விரைவாக எரித்து அஸ்தியை வழங்க முடியும் என்றும், விறகு அல்லது சாண வறட்டிகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கால விரயமும், கூடுதல் செலவும் இதில் தவிர்க்கப்படும் என்றும் ஆத்மா நிர்வாகிகள் தெரிவித்தனர். 

தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள  இந்த எரிவாயு நடமாடும் தகன வாகனத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 60 கிமீ சுற்றளவிற்கு  சேவையளிக்கவும், இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின் தமிழகம் முழுவதும் ரோட்டரி சங்கங்களின் மூலம் கிராம புற மக்களுக்கு இந்த சேவையை விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *