‘எவ்ளோ அவார்டு வாங்கினாலும் யாரும் எங்கள கண்டுகறதே இல்ல’… மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் வேதனை…!

நேஷனல் அவார்டு, சாம்பியன் அவார்டு வாங்கியும் வீட்டுலயும், வெளியிலயும் சபபோர்ட் இல்லை இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா வேதனை. நேஷனர் அவார்டு, சாம்பியன் அவார்டு வாங்கியும் வீட்டுலயும் சரி வெளியிலும் சரி சப்போர்ட் இன்றி அவதிப்பட்டேன்  என மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா வேதனை தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வேலம்மாள் ரெசிடென்சியல் பள்ளியின் விளையாட்டு தின விழாவின் சிறப்பு விருந்தினராக மாற்றுத் திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின்சிவா வருகை தந்திருந்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம், சான்றுகள் வழங்கிய பின் அவர்  பேசுகையில்  தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி வெற்றி பெற்ற பிறகு வீட்டுலயும், சரி வெளியிலும் சரி ஆதரவின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளானேன், அதனையும் மீறித்தான் வெற்றி பெற்றேன். 

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது தமிழக அணிக்கு தேர்வானேன். ஆந்திராவில் போய் விளையாட சென்றோம், தமிழ்நாடு அணியின் நிலைமை பரிதாபமாக இருந்தது. மூன்று வருடங்களாக அணி  தோல்வியடைந்ததை பார்த்துகொண்டே இருந்தேன், அதன் பின்  தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக 2011ல் தேர்வு செய்யப்பட்டேன். 

இன்று தமிழ்நாடு அணியை பார்த்தாலே மற்ற அணியினர் பயப்படும் அளவிற்கு வெற்றி பெற்றோம்.தேசிய அணிக்கு தேர்வாகி தலைவராக ஆனேன்.  விளையாட மைதானம் கூட கிடையாது, நேஷனன் அவார்டு, சாம்பியன் அவார்டு பெற்றும் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி சப்போர்ட் பண்ணவே இல்லை. 

பிடிவாதமாக இருந்து இன்று இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தலைவராக ஒரு தமிழனாக வெற்றி பெற்றுள்ளேன். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வெளியில் அவ்வளவாக தெரியாது என்றார். விழாவில் சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்,.  வேலம்மாள் கல்வி குழுமத்தின் துணைதலைவர் கணேஷ்ராம், வேலம்மாள் ரெசிடென்சியல் பள்ளி முதல்வர் சன்ராபின், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *