13 வருடங்களுக்கு பின் ஏரிகள் நிரம்பியதால் கிடாவெட்டி கொண்டாடிய விவசாயிகள்

இராசிபுரம் வெண்ணந்தூரில் 7 ஏரிகள் நிரம்பின- விவசாயிகள் மகிழ்ச்சி.13- வருடங்களுக்கு பின் நிரம்பியதால் கிடாவெட்டி கொண்டாடிய விவசாயிகள்.

இராசிபுரம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள 7 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி.மணிகனேசன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் விவசாயிகள் கெடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.

நாமக்கல்: இராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில் சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கிருந்து வரும் தண்ணீரானது திருமணிமுத்தாறு வழியாக பூலாவரி ஏரி, மின்னக்கல் ஏரி, கட்டிபாளையம் ஏரி, பூலான்குட்டை, சவுரிபாளையம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, சேமூர் போன்ற ஏரிகள் வழியாக சென்று மீண்டும் பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இராசிபுரம் மற்றும் சேலம் பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மின்னக்கல், கட்டிபாளையம், பூலான்குட்டை, சவுரிபாளையம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, சேமூர் ஆகிய 7 ஏரிகள் தண்ணீர் நிரம்பி மறுகால் செல்கிறது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் கிடா வெட்டி நீர் நிலைகளில் பூக்களை தூவி கொண்டாடினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *